Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

125 கோடி கறுப்பு பணம்? சிக்கிய ‘வழக்கறிஞர்’?

தலைநகர் டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவரும் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்கு சமீபத்தில் டெல்லியின் சட்ட குழுமம் ஒன்று சீக்ரெட்டாக ஒரு அதிரடி வருமானவரிதுறை சோதனை ஒன்று நடத்தியுள்ளது. இதன் முடிவுவில் அதிர்ச்சி தரும் படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். என்ன அறிவிப்பு தெரியுமா? “வருமான வரி துறை சமீபத்தில் நடத்திய சோதனையில் ஒரு வழக்கறிஞரின் வங்கி கணக்கில், கணக்கில் காட்டப்படாத தொகை 125 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”.

காட்டி கொடுத்த 100 கோடி பங்களா!!!

புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த பறிமுதல் ரொம்பவே அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது. டெல்லியின் தெற்கு பகுதியல் உள்ள அவரது வீட்டில் இருந்து மட்டும் 125 கோடி கிடைத்திருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியோடு ஆச்சர்யத்தையும் தந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். சமீபத்தில் 100 கோடி ரூபாய்க்கு டெல்லியின் மத்திய பகுதியில் அவர் கட்டியுள்ள பங்களா போன்ற மாளிகை வீடு தான் வருமானவரித்துறையின் இச்சோதனை சந்தேகத்துக்கு முதல்படி என்கின்றனர். என்றபோதிலும், இந்த பங்களாவிற்கான செலவு கணக்கில், எவ்வித சட்ட சிக்கலும் இல்லாமல் சட்டரீதியாக எல்லாமே பெர்ஃபக்ட்டாக இருந்திருக்கிறது. அதனால் தானோ என்னவோ வருமானவரித்துறையினர் அவரது இன்னபிற சொத்துகளை மதிப்பிட தொடங்கியுள்ளனர்.

கணக்கில் காட்டப்படாத வருமானத்தை வெளிபடுத்தும் திட்டம்

கறுப்பு பணம் பற்றிய விபரங்களை தெரிவித்து அதற்கு 45% வருமானவரி கட்டிவிட்டு தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கடந்த செப்டம்பர் 30ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் சுமார் 65 ஆயிரம் கோடி வரை அரசுக்கு கிடைத்தது. 4 மாதங்களாக வருமானவரித் துறை கணக்கில் காட்டப்படாத வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தை நீட்டி இருந்தது. என்ற போதிலும், கணக்கில் காட்டப்படாத வருமானத் தொகையை வெளிப்படுத்த எடுத்த முயற்சியில் வருமானத்துறையினர் தோற்றுதான் போயிருக்கின்றனர்.

மறைக்கப்பட்ட கோடிகள்?

வருமானத்துறையை சேர்ந்தவர் ஒருவர் கூறும் போது, இந்த சோதனையின் போது ஷெல் கம்பெனியில் அவர் செய்த முதலீடுக்கான ஆவணங்கள் மற்றும் வேறு சில சொத்து மதிப்புகளுக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். வழக்கறிஞரின் சொத்துக்கள் மீதான இந்த சோதனை, வருமானத்தை வெளிபடுத்தும் திட்டம் முடிந்த ஒரே வாரத்தில் நடத்தப்பட்டுள்ளது. அவகாசம் முடிந்த ஒரே வாரத்தில் கணக்கில் அடங்கா பணம் ரூ.125 கோடி கிடைத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. அதிலும், வக்கீல் ஒருவர் சட்டத்தை மதிக்காது, இப்படி கணக்கில் காட்டப்படாத இவ்வளவு அதிகமான தொகை வைத்திருப்பது வருமானத்துறை அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது.

ஹை-ப்ரொஃபைல் டார்கெட்ஸ்….

வக்கீல் ஒருவரின் சொத்துக்கள் மீதான வருமானத்துறையின் இந்த சோதனை, நிபுணர்கள், பரப்புளையாளர்கள் என சில முக்கிய புள்ளிகளை இனைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது வருமானத்துறையின் இந்த ஆபரேஷன், முக்கியமாக ஈடுபடவிருப்பது விமானத்துறை, பாதுகாப்பு துறை, உள்கட்டமைப்பு துறை முதலிய துறைகளில் உள்ள இந்த வக்கீலின் வேண்டப்பட்டவர்களின் வீடுகளில் தானாம். ஏனெனில், இதற்கு முன்னர் பாதுகாப்பு துறையை சேந்த சஞ்சய் பந்தாரி (கடந்த ஜீன் மாதம் வருமான வரித்துறையினர் பந்தாரியின் பெங்களூருவிலிருக்கும் இரு தொழிற் நிறுவனங்களை சோதனையிட்டு, அங்கு 2009லிருந்து 2014 வரை பெறப்பட்டுள்ள 70கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). கார்ப்பரேட் மற்றும் விமானத்துறை பற்றிய அறிவு கொண்ட, அரசியல் செல்வாக்கு கொண்ட பரப்புரையாளர் தீபக் தல்வார் மற்றும் சனயால் என்னும் வருமான துறையின் முக்கிய பிரமுகர் என இப்படி சிலரையே இதுவரை குறிவைத்துள்ளனராம். இதையெல்லாம் பார்க்கும் போது, சமீபகாலமாக வருமான வரித்துறையினர் ஹை-ப்ரொஃபைல் மக்களையே அதிகம் டார்கெட் செய்கின்றனர் என்பது தெரிகிறது.

-ஜெ. நிவேதா,
மாணவப் பத்திரிகையாளர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ