Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மொபைல் டவர் கதிர்வீச்சால் பாதிப்பில்லை' - மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மக்கள் நல வழக்கு ஒன்றில், மத்திய அரசு மொபைல் டவர் கதிர்வீச்சால், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தது. இது பற்றி மத்திய அரசு, ' தொலைதொடர்பு துறை அமைச்சகம், தொடர்ச்சியாக நாட்டில் இருக்கும் மொபைல் டவர்களில், சர்வதேச அளவில் விதிக்கப்பட்டிருக்கும் கதிர்வீச்சு அளவு சரியாக உள்ளதா என்று சோதனைகள் நடத்துகிறது. அந்த சோதனைகளில், பல நாடுகளில் உள்ளதை விட இந்தியாவில் மொபைல் டவர் கதிர்வீச்சு குறைவுதான். இந்த குறைவான கதிர்வீச்சால் மக்களுக்கு பாதிப்புகள் உண்டாவது பற்றி சான்றுகள் இல்லை.' என கூறியுள்ளது.

 


ஆனால், நாட்டில் இருக்கும் 12 லட்சம் மொபைல் டவர்களில், இதுவரை 10 சதவீத டவர்களை தான் ஆய்வு செய்திருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.


இந்த பொது நல வழக்கில் மனுதாரர் சார்பில ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ,'பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே மொபைல் டவர்கள் இருப்பது பற்றியும், அது எவ்வித விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அரசு நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும்.' என்றார்.
மத்திய அரசு, நிபுணர் குழுவை வைத்து, இந்த விஷயத்தில் ஆய்வு செய்யவுள்ளது.  

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ