Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறையில் இருந்து கொண்டு வியாபாரம் செய்யும் கைதி

கேரளா பீடி தொழிலதிபர் முகமது நிஷாம், கொலை வழக்கு ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கண்ணூர் சிறையில் இருந்து கொண்டே வியாபாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களது உறவினர்களே காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். கண்ணூர் சிறையில் அவருக்கு வி.ஐ.பி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.


அங்கு அவருக்கு இரண்டு மொபைல்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு அவர் வழக்கம் போல வியாபாரம் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறையினரின் பாதுகாப்பிலேயே அவர் இதை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஜனவரி மாதம் கைதான முகமது நிஷாம் ஒரு ஆயுள் தண்டனை கைது. அவர் செய்த குற்றத்துக்காக அவருக்கு மேலும், 24 ஆண்டுகள் தண்டனை கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. இவர் மேல் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ