Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருப்பு பணம், ஊழலுக்கு எதிராக 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' : மோடி எச்சரிக்கை

பிரதமர் மோடி  இந்திய ராணுவம் எல்லையில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும் முறையோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.


குஜராத் வதோதராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மோடி, ”இந்தியாவில் கருப்புப் பணம் வைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக,  65,000 கோடி ரூபாய்  கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்துள்ளோம். மேலும் மாணியங்களை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு செலுத்துவதன் மூலம் 36,000 கோடி ரூபாய் ஊழலை தவிர்க்க முடிந்தது. ஆக மொத்தம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் ஒரு லட்சம் கோடி கருப்பு பணம் வெளியே வந்துள்ளது. 


 ’சர்ஜிக்கல் ஸ்டரைக் போன்று அதிரடி முறையை பயன்படுத்தாமலே ஒரு லட்சம் கோடி ரூபாய் வெளியே வந்துவிட்டது' என ராணுவ நடவடிக்கையை கருப்பு பணத்துடன் ஒப்பிட்டு பேசினார்.  'இன்னும் அது போன்று ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் இந்தியா முழுவதும் உள்ள கருப்பு பணம் வெளியே வந்துவிடும். மத்திய அரசு விளம்பரப்படுத்தாமல்,  ஊழலுக்கு எதிராக நீடித்த போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாகத் தான் தற்போது இடைத்தரகர்கள் இல்லாமல் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாணியங்கள் சென்றடைகிறது. சரியான நபருக்கு பணம் வழங்கப்படுகிறது', இவ்வாறு அவர் பேசினார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close