Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

55 வருட சேவை முடிந்து ஓய்வுக்கு திரும்பும் ’ஐஎன்எஸ் விராட்’

உலகின் பழமை வாய்ந்த விமானம் தாங்கி கப்பலான  ஐஎன்எஸ் விராட்டின்,  55 வருடக்கால சேவை முடிந்து, இன்று கொச்சியில் இருந்து சிறப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இந்திய கடற்படையில் உள்ள விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ்  விராட்டை இந்தியா வாங்குவதற்கு முன்னர், இங்கிலாந்து கப்பற்படை சேவையில்  30 ஆண்டுகள் இருந்தது. பின்னர், பிரிட்டிஷ் கப்பற்படைக்கு , 1959-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 1982-ஆம் ஆண்டில் போலாந்து தீவுகள் கடற்படைப் பணிப்பிரிவில் இருந்தது. பின்னர் 1985-ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. மறு சீரமைப்புக்குப் பின் 1987-இல் இந்திய கப்பற்படையில் ஐஎன்எஸ் இணைக்கப்பட்டது.


தற்போது, விராட் வெற்றிகரமாக ஐந்து சகாப்தங்கள் நிறைவுப் பெற்று ஆந்திர அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் முக்கிய கருவிகள் அகற்றப்பட்டப் பின்னர் கப்பல் சுற்றுலா மையங்களிலோ, அருங்காட்சியகத்திலோ வைக்கப்படும்.  ஆந்திர அரசு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு, விராட்டை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ