Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

21 மாவோயிஸ்டுகள் அதிரடி என்கவுன்டர்

ஆந்திர-ஒடிசா எல்லையில் நேற்றிரவு காவல்துறை நடத்திய என்கவுன்டரில் சுமார் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா காவல்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் நேற்றிரவு ஈடுபட்டபோது, மால்கான்கிரி பகுதியில், 50-60 மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த முகாம் மீது பாதுகாப்பு படையினர்  நடத்திய தாக்குதலில், 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 பாதுகாப்பு படை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் இருந்து, வெடிபொருட்கள், மூன்று AK-47 மற்றும் எஸ்எல்ஆர் துப்பாக்கிகள்  உட்பட பல்வேறு ஆயுதங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ