Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் கலாநிதிமாறன், அவரது சகோதரர் தயாநிதிமாறன் ஆகியோர் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளினால் 2ஜி வழக்கின் ஒரு அங்கமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கலாநிதிமாறன், அவரது சகோதரர் தயாநிதிமாறன் ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close