Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரிஸ் தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்புடைய நபர் தமிழகத்தில் கைது

தமிழகத்தில் கைதான, சுபஹானி ஹாஜா மொய்தீனுக்கு, பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 திருநெல்வேலி அருகே, கடையநல்லூரில், தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் சுபஹானி என்பவரை,  ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளதாக கைது செய்தது. சுபஹானியிடன் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பாரிசில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அப்டெலாமித் அபாவுட், சலா அப்தெஸ்லாம் உள்ளிட்டவர்களை சுபஹானி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஈராக்கில் சந்தித்துள்ளார். அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் பிறகு, ஒரு சில மாதங்களில் பாரிஸ் தாக்குதலை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.  இவர்களில், அபாவுட் என்னும் தீவிரவாதி, பிரான்ஸ் போலீசாரால் கொல்லப்பட்டான். அப்தெஸ்லாம், பிரான்ஸ் போலீசில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சுபஹானிக்கு பாரிஸ் தாக்குதல் நிகழ்த்தியவர்களுடன் தொடர்புடையது தெரிய வந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துாதரக அதிகாரிகளுக்கு, என்.ஐ.ஏ.அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்  புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுபஹானியிடம் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close