Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பதவியில் இருந்து விலகத்தயார்: அகிலேஷ் கண்ணீர்

உத்தர‌ப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் மோதல் வலுத்து வரும் நிலையில், தந்தை முலாயம்சிங் விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்ணீர் மல்க கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முலாயம் சிங் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் தற்போது கட்சிக்குள்ளும் எதிரொலித்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவ் அதிரடியாக நீக்கினார். இதனால் ஆவேசம் அடைந்த, அகிலேஷ், தனது சித்தப்பா ஷிவ்பாலை அமைச்சரவையில் இருந்து நீக்கியதோடு, அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 3 அமைச்சர்களையும் நீக்கினார்.

இதற்கு தந்தை முலாயம் சிங் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனது சகோதரர் ஷிவ்பாலிற்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தந்தை முலாயம்சிங் விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ''சிறந்தவராக யாரை கருதுகிறாரோ அவரை முதல்வராக முலாயம் சிங் நியமிக்கப்படும். தந்தைக்கு எதிராக புதிய கட்சி எதுவும் தொடங்கும் எண்ணமில்லை'' என்று அகிலேஷ் தெரிவித்தார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங், நமது பலவீனத்துக்கு எதிராக போராடுவதற்கு பதில் நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம் என்று வேதனை தெரிவித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close