Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.எஸ்.ஜி குறித்து விவாதிக்க நியூசி., பிரதமர் இந்தியா வருகை

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ, இன்று என்.எஸ்.ஜி என்று கூறப்படும் 'அணுசக்தி விநியோக குழு' சம்பந்தமாக விவாதிக்க இந்தியா வருகிறார். அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவால் இதுவரை உறுப்பினராக முடியாமல் இருக்கையில், ஜான் கீ உடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 


வரும் நவம்பர் மாதம், வியன்னாவில் அணுசக்தி விநியோகக் குழுவின் சந்திப்பு நடக்கவுள்ளது. அதற்கு முன்னர், சீனாவுடன் இந்தியா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்தத் தகவல் கடந்த வார பிரிக்ஸ் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. அணுசக்தி விநியோகக் குழுவில் இணைவது, இந்தியாவுக்கு கவுரவம் சார்ந்ததாக இருப்பதால், அக்குழுவில் இணைய தன்னால் இயன்ற காரியங்களை செய்து வருகிறது இந்தியா.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ