Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாந்திரீக செயல்களுக்காக வேட்டையாடப்பட்ட புலியின் பாதம்

மத்தியப்பிரதேசம்  அருகே கன்ஹா புலிகள் காப்பகத்தில், பாதங்கள் அகற்றப்பட்ட நிலையில், ஏழு வயது மதிக்கதக்க ஆண் புலியின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புலியை வேட்டையாடியவர்கள், அதன் பாதங்களை மாந்திரீக செயல்பாடுகளுக்காக எடுத்திருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 15,000 சன்மானமாக வழங்கப்படும் என கன்ஹா தேசிய பூங்காவின் இயக்குநர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் கன்ஹாவில் 8 புலிகள் உயிரிழந்துள்ளன. மேலும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 23 புலிகள் இறந்துள்ளன.

ஜனவரி 2015-ல் எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் படி, மத்தியப்பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 257-ல் இருந்து 308 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் 34 புலிகள் இறந்ததால் மீண்டும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது வனவிலங்கு பாதுகாப்பினருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close