Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிப்பூர் முதல்வரை குறிவைத்த தீவிரவாதிகள்

தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் மணிப்பூர் மாநில முதல்வர் ஒக்ரம் ஐபோபி சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக ஒக்ரம் ஐபோபி சிங் என்பவர் இருந்து வருகிறார். இவர் இன்று உக்ரூல் ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்றார். அப்போது, அவரை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஒக்ரம் ஐபோபி உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close