Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாஜி அலி தர்காவுக்குள் இனி பெண்களும் செல்லலாம் !

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் ( Haji Ali Dargah) பெண்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அந்த தர்காவின் அறக்கட்டளை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, பெண்கள் அமைப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், தர்காவுக்குள் பெண்களும் நுழைய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தர்கா அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முற்போக்கான முறையில் சிந்தித்து செயல்படுமாறு அறக்கட்டளை நிர்வாகத்தினரை கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் தர்கா அறக்கட்டளை நிர்வாகத்தினர், பெண்கள் தர்காவில் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நான்கு வார கால அவகாசம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், நான்கு வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக இழுப்பறியில் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close