Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் அதிகமாக விளம்பரம் செய்யப்படும் விளம்பரப் பட்டியலில் 'பதஞ்சலி'

ஏட் எக்ஸ் இந்தியா என்ற ஊடக ஆய்வுத்துறை நிறுவனம், பதஞ்சலி பொருட்களுக்கான டிவி விளம்பரம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது. பதஞ்சலிக்கு முன் 'ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்' நிறுவனமும், 'ரெக்கிட் பென்கிசர்' நிறுவனமும் தான் இருக்கிறது.

பதஞ்சலியின் விளம்பரங்களில் சமீபகாலங்கலாக 'ஹேமா மாலினி' போன்ற சினிமா நட்சத்திரங்களும் தோன்ற ஆரம்பித்துள்ளனர். பதஞ்சலி பொருட்களுக்கான விளம்பரம், மொத்த தொலைகாட்சி ஒளிபரப்பு நேரத்தில்,  4,524 மணி நேரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. 


இது தொடர்பாக, பதஞ்சலியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ' நாங்கள் விளம்பரங்களுக்காக ஒதுக்கும் தொகை மிகக் குறைவானதே. எங்கள் மொத்த வருவாயில், விளம்பரங்களுக்கு நாங்கள் செலவு செய்வது வெறும் இரண்டிலிருந்து மூன்று சதவீதமே' என்று கூறினார். 

எடிட்டர் சாய்ஸ்