Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ரத்தன் டாடா..!

டாடா சன்ஸ் குழுமத்தின் சேர்மேனாக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டார். மறுபடியும், சேர்மனாக ரத்தன் டாடா நியமனமானார். ரத்தன் டாடாவின் பதவிக் காலம், நான்கு மாதங்களுக்குத் தொடரும். அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க, தேர்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மிஸ்ட்ரி நீக்கப்பட்டதற்கு, எந்தவித காரணங்களும் கூறப்படவில்லை. ஆயினும், டாடா குழுமத்தின் சில லாபம் ஈட்டா தொழில்களில் கவனம் குறைந்தது அதிருப்திக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


2011-ம் ஆண்டிலிருந்து சைரஸ் மிஸ்ட்ரி தான் அந்த பதவியில் இருந்து வந்தார். டாட்டா குழுமத்தின் டர்ன்-ஓவர் கடந்த ஆண்டு (108 பில்லியன்)-இல் இருந்து 103 பில்லியனாக குறைந்து இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ