Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருண் காந்தியைத் தாக்கிய 'தேஜா வூ'

1978-ம் ஆண்டு வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி, இந்தியாவின் முதல் 'அரசியல் பாலியல் குற்றச்சாட்டை' முன் வைத்து, அப்போது, துணை பிரதமராக இருந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டினார். 

1978-ல், 'சூரியா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மேனகா, பாபு ஜெகஜீவன்  ராமின் 47 வயது மகன் 21 வயதுடைய டெல்லி பல்கலைக்கழக மாணவியுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு, 'ராணுவ ரகசியங்கள் கசியவிடப்பட்டதா?' என்ற தொனியில் கட்டுரை எழுதி இருந்தார்.

 


தற்போது அதேபோல் ஒரு சம்பவம், வருண் காந்திக்கு ஏற்பட்டிருக்கிறது. வருண் காந்தி மீது தற்போது 'ஹனி டிராப் என்கிற பாலியல் குற்றச்சாட்டு' சுமத்தப்பட்டிருக்கிறது. அவர் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால், 'இந்த எல்லா குற்றச்சாட்டும் அரசியல் நோக்கம் கொண்டவை. ஆதாரமற்றவை. சட்டபூர்வமாக இதை எதிர்கொள்வேன்' என்று வருண் காந்தியும் சொல்லி இருக்கிறார். ஆயினும், உத்தரப்பிரதேசத்தில், அடுத்த வருடம் தேர்தல் வரவுள்ள நிலையில், வருண் காந்தி மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது கவனத்துக்குரியது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ