Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெபிட் கார்டுகளை பாதுகாப்பது இனி ரிசர்வ் வங்கியின் பொறுப்பு !

டெபிட் கார்ட் தகவல்களை பாதுகாக்கும் முழு பொறுப்பை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி டெபிட் கார்ட் தகவல்கள் திருடப்படாமல்  இனி ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். 

கடந்த வாரம், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களின் பரிவர்த்தனைகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால், 6.26 லட்ச டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டது. விரைவில் அவர்களுக்கு புதிய டெபிட் கார்ட் வழங்கப்படுவதாகவும் ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும் நாடு முழுவதும், 32 லட்சம் பேரின், 'டெபிட் கார்டு' விபரங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இதனால், டெபிட் கார்டு பயனர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு பிறப்பித்துள்ள  உத்தரவில்,  டெபிட் கார்டுகளை உடனடியாக மாற்றித்தருமாறு கோரியுள்ளது. மேலும் எவ்வளவு கார்டுகளின் தகவல் திருடப்பட்டுள்ளது என்றும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. 

நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கியிடமும், நேஷனல் பேமண்ட் கார்ப்பொரேஷனிடமும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து  ரிசர்வ் வங்கி உயர்மட்ட குழு நடத்திய ஆலோசனையில்  டெபிட் கார்டுகள் தகவல் பாதுகாப்பு பொறுப்பை முழுவதுமாக  ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி ‘Data breach' நடக்காமல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close