Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய ஆணழகன் பட்டத்தை வென்ற லாரி டிரைவர்

பெங்களூரு, ஒயிட்ஃபில்டைச் சேர்ந்த 25 வயதுடைய பாலகிருஷ்ணா, சமீபத்தில் பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய அளவிலான ஆண்களுக்கான 'பாடி பில்டிங்' போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அவரின் வெற்றியில் குறிப்பிடத்தகும்படி இருப்பது, அவர் முழு நேரத்தையும் உடற்கட்டை செம்மையாக்குவதற்கு செலவழிப்பதில்லை. தண்ணீர் லாரி ஓட்டிக் கொண்டும், பகுதி நேர ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து கொண்டே  தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்திருக்கிறார். 

 

அவரது உணவு பழக்கத்தைப் பற்றி பாலகிருஷ்ணா கூறுகையில், ' தினமும் 750 கிராம் சிக்கன், 25 முட்டை, 300 கிராம் அரிசி, 200 கிராம் காய்கறிகள் மற்றும் கூடுதல் புரதச் சத்துக்கு பழங்களையும் மீனும் உட்கொள்கிறேன்.' என்றார் இந்த சாம்பியன். பிலிப்பைன்ஸில் நடந்த போட்டிக்கு, தனது எடையை 120 கிலோவில் இருந்து 90 கிலோவுக்குக் குறைத்து பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்னரும், 24 வயதுக்கு உட்பட்டோருக்கான, மிஸ்டர்.யுனிவர்ஸும், மிஸ்டர்.வோல்ட் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இவ்வளவு பட்டங்கள் பெற்ற பின்னரும், பாலகிருஷ்ணாவுக்கு நிதிச் சிக்கல் தீர்ந்தபாடில்லை, 'எனது கவலை எப்போதுமே பணம் சார்ந்தது தான். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு, அரசின் ஆதரவு இல்லாததால் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளேன்' என்று வருத்தப்படுகிறார் பாலகிருஷ்ணா.

 


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close