Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சினிமா எடுக்க போதைப்பொருளை விற்ற தயாரிப்பாளரும் இயக்குநரும்!

ஒரு போதைக்காக இன்னொரு போதைக்கு போனால் நிலைமை தலைகீழாகும் என்பதற்கு சினிமா தயாரிப்பாளரும், இயக்குநரும் முன்னுதாரணமாக சிறையில் நிற்கிறார்கள். 

நெல்லூரை சேர்ந்த வைர வியாபாரி வெங்கடேஷ் சுரேஷ்பாபு. சினிமா மோகத்தால் வைர வியாபாரத்தை விட்டுவிட்டு சினிமா எடுக்க ஹைதராபாத் கிளம்பி வந்திருக்கிறார். கையில் இருந்த பணத்தை வைத்து பூஜை போட்டு படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். பாதி படம் முடிக்கும் போதே, பணம் பற்றாக்குறையால் படப்பிடிப்பு நொண்டியடித்து நின்றிருக்கிறது.

உதவி டைரக்டர் கிஷோர், தயாரிப்பாளரிடம் மீதி படத்தை என்னிடம் கொடுங்கள் முடித்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி பணத்துக்கும் ஐடியா கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த ஐடியா போதை பொருளை விற்றால் பணம் கொட்டும். மீதி படமும் எடுத்த மாதிரி இருக்கும் நீங்களும், நானும் செட்டில் ஆகி விடலாம் என்று சொல்லி இருக்கிறார். இவர்களுடன் நெல்லூரில் உள்ள ஹோட்டல் அதிபர் ஶ்ரீஹரி ரெட்டியும் சேர்ந்து இருக்கிறார். மூன்று பேரும் போதை பொருள் டிஸ்ட்ரிபியூசனில் இறங்கி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஐதாரபாத் மற்றும் நெல்லூர் புறநகர் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து பொறியியல் கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து போதைப் பொருளை வினியோகம் செய்து இருக்கிறார்கள். இப்படி வெளியில் டிஸ்ட்ரிபியூட் செய்துவிட்டு வந்த சமயத்தில் டூண்டிக்கல் என்ற பகுதியில் போலீஸ் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருக்க, தயாரிப்பாளரும், இயக்குநரும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் கொடுத்த தகவலில் நெல்லூரில் போதை பொருள் வினியோகஸ்தராக இருந்த ஶ்ரீஹரி ரெட்டியும் போலீஸ் வலைக்குள் வந்திருக்கிறார். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு ஆறு கோடியாம். சினிமாவை விட போதை பொருள் நல்ல பணம் தருகிறது மாறாமல் இருந்திருப்பார்கள் போல. போதை பொருள் ஆசாமிகளால் டோலிவுட் இப்போது கிலி  அடித்து இருக்கிறது. 

கிஷோர் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவிடம் துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞா. சக்திவேல் முருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ