Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு பேருந்துப் பயணம் தமிழகத்தில் பாதுகாப்பானதாக இருக்கிறதா? - PeopleSurvey

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு பகல் நேரத்தில்தான், சீண்டல்கள், உரசல்கள் போன்ற தொல்லைகள் என்றால், முன்பதிவு செய்து ஸ்லீப்பர் பேருந்துகளில் இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது, நடக்கும் பாலியல் தொல்லைகள் அதைவிட அதிகம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து அண்மையில் மாலாபுரத்துக்கு பயணம் செய்த அன்னி என்ற பெண்ணிடம், பேருந்தில் அடையாளம் தெரியாத நபர்  தவறாக நடந்து கொண்டார். அந்த சம்பவத்துக்கு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகித்த அன்னி, திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரளாவில் மட்டுமா பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள்  ஏற்படுகின்றன? மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் வெளிப்படாமல் இருக்கலாம். இதுபோன்ற தொந்தரவுகளை உங்களில் பல பெண்கள் சந்தித்து இருக்கலாம், ஆண்களாக இருந்தால் உங்கள் தோழியோ, மனைவியோ, சகோதரியோ அல்லது மகளோ உங்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள், தொல்லைகள் பற்றி கூறியிருக்கலாம். விரிவாக இல்லாவிட்டாலும் மேலோட்டமாக இதைப்பற்றி பேசாத பெண்கள் இருக்க முடியாது. உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை மனதில் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்...

- நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close