Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 2017 FIFA கால்பந்து போட்டி

2017 ஆம் ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை  ( FIFA under-17 ) இந்தியா ஹோஸ்ட் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மும்பையின் டி.ஒய் படேல் மைதானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்தாண்டு  17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி மும்பையில் தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தை  பிஃபா பிரதிநிதிகள்  ஆய்வு செய்து வருகின்றனர். கொல்கத்தா, கொச்சி, மும்பை, கோவா, புது தில்லி, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆறு மைதானங்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ளனர். 

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இயக்குனர் ஜவிர் செப்பி கூறுகையில், “17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அட்டவணை, அடுத்தாண்டு ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும்.  அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கும் போட்டி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் FIFA கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு  இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்திய கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ