Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உரி தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா

காஷ்மீர் உரி தாக்குதலுக்கு, பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தான் காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், கடந்த 18-ம் தேதி அதிகாலை ராணுவ வீரர்கள் மீது  தாக்குதல் நடத்தினர். இதில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நான்கு பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான முகமது அனஸ் என்பவருக்கு இறுதி பிரார்த்தனையை, லஷ்கர் தலைமை அமைப்பான ஜமாத்-உத்-தாவா ஏற்பாடு செய்துள்ளது. இந்த அறிவிப்பை பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பகுதியில் போஸ்டர் மூலம் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

அந்த இறுதி சடங்கு போஸ்டரில்,  ”உரி தாக்குதலில்  177 இந்து வீரர்களை கொன்ற  சிங்க மனம் படைத்த  போர் வீரன்  அபுசிராகா அகமது அனஸ்” என உருது மொழியில் அவரை வாழ்த்தியுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

உரி தாக்குதலுடன் தொடர்பில்லை என பாகிஸ்தான் தெரிவித்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டர் பாக்., தீவிரவாதிகள் தான் உரி தாக்குதல் நடத்தினார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ