Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவன் கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய காதல் ஜோடி

பீஹார் மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த முகமது சோஹனும், நியுரிஷா காட்டூன், என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்ல இருவருக்கும் பயம். எனவே, வீட்டை விட்டு வெளியேற இருவரும் திட்டமிட்டார்கள். இவர்கள் திருமணம் செய்ய அவர்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் சுதீர் குமார் சிங் உதவி செய்துள்ளார்.


அதன்படி, அவர்களது கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இஸ்லாமிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். இதனால் தற்போது இந்த காதல் ஜோடிக்கு செம மகிழ்ச்சியாம். தங்களது காதலை இணைத்த, சிவன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்களது திருமண நாளின்போது செல்வோம் என்று வேறு உறுதியெடுத்துள்ளனர் இந்த காதல் ஜோடி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close