Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜியோ இலவச சேவை மார்ச் 2017 வரை தொடரலாம்..!

செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஜியோ தொலைதொடர்பு துறையில் கால் பதிக்கும்போது, அதன்  சேவைகள் டிசம்பர் 2016 வரை முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்றது. இதனால் வேகமாக அதற்கு வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு மற்றும் ஒழுங்காற்று வாரியத்திடம், சந்தையில் இருக்கும் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோ நிறுவனத்துக்கு சரியாக இணைப்பு கொடுக்காததால், 'கால் ட்ராப்' அதிகமாக இருக்கின்றது என்று புகார் அளித்தது. ட்ராய் (TRAI) புகாரை விசாரித்து, சரிவர இணைப்பு கொடுக்காத மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா ஆகியவற்றுக்கு அபராதம் விதித்தது.

 

 

இது நடந்து கொண்டிருக்கும்போதே, ஜியோ நிறுவனத்தின் இலவச சேவை டிசம்பர் மூன்றாம் தேதியே முடிவடையப் போகிறது என்ற செய்தியும் வெளியானது. இப்படிப்பட்ட செய்தி வந்த நிலையில்தான், ஜியோ நிறுவன வட்டாரங்கள், அதன் இலவச சேவை 2017 மார்ச் வரை தொடர வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன. 'இன்னும் எங்கள் நிறுவனம் எதிர்பார்த்த அளவில் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை அளிக்க முடியவில்லை. மற்ற நிறுவனங்களும் இதுவரை சரிவர ஒத்துழைக்கவில்லை. எனவே இலவச சேவையை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது' என்று கூறுகின்றனர் ஜியோ அதிகாரிகள். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ