Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 மடங்கு உயரும் குடியரசுத் தலைவர் சம்பளம்

குடியரசுத்தலைவரின் ஊதியத்தை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சத்துக்கு (மாதம்) உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கேபினட் செயலாளர்களுக்கே குடியரசுத் தலைவரை விட அதிக ஊதியம் என்பதால் இந்த முடிவாம். இதனால் குடியரசுத் தலைவரின் ஊதியம் 3 மடங்கு உயர உள்ளது. அதேபோல் துணை குடியரசுத் தலைவரின் ஊதியமும் ரூ1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சம் ரூபாயாக உயர்த்த உள்ளனர். முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்