Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்‌ இன்று தொடங்கியது.

வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்  நவம்பர் 2-ம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகின்றன. மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், 5-ம் தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நவம்பர் 19-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22-ம் தேதியும் நடைபெறுகின்றன. 

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ