Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சிகரெட் பாக்கெட்டில், புகைப்பிடித்தலுக்கு எதிரான விளம்பரத்தால் பயனில்லை'- ஐ.டி.சி

இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பாளரான ஐ.டி.சி, புகைப்பிடித்தலுக்கு எதிராக சிகரெட் பாக்கெட்டில் விளம்பரத்தின் சதவீதத்தை அதிகரிப்பதால் பெரிய மாற்றம் வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது.


இந்த ஆண்டின் முற்பகுதியில், இந்திய அரசாங்கம் சிகரெட் பாக்கெட்டில் 20 சதவீதமாக இருக்கும் விளம்பர அளவை 85 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தது.


இது பற்றி ஐ.டி.சி நிறுவனம், 'விளம்பரத்தை சிகரெட் பாக்கெட் அட்டையில் அதிகரிப்பதால், புகைப்பிடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. சிகரெட் பாக்கெட்டில், எந்த அளவுக்கு எச்சரிக்கை படங்கள் போதுமானவை என்று அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வருவோம்.' என்றது.


ஆனால், ஆரோக்கியம் சார்ந்து இயங்கும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசும், பெரிய எச்சரிக்கை விளம்பரம் சிகரெட் பிடிப்பதை மக்களிடையே குறைக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ