Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2020-இல் 10,500 புதிய நிறுவனங்கள்....அசத்தும் இந்தியா

சர்வதேச அளவில் புதிய நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக நாஸ்காம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாஸ்காம்-ZINNOV நிறுவனம் ”Indian Startup Ecosystem Maturing - 2016” என்னும் ஆய்வு நடத்தியது. இந்தியாவில் ஸ்டார்ட் அப்ஸ் என்று கூறப்படும் புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை,  2020 ஆண்டுக்குள் இரு மடங்கு உயர்ந்து 10,500 ஆக இருக்கும் என அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 2,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 

உலகளவில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் தான் அதிகப்படியான புதிய நிறுவனங்கள் உள்ளதாம். மேலும் 2016 ஆண்டு முடிவில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10% உயர்ந்து 4,750 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close