Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜாகிர் நாயக்கின் தொண்டு நிறுவனத்துக்கு தடை?

ஜாகிர் நாயக்கின் 'இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' தொண்டு நிறுவனத்தை, 'சட்டத்துக்கு புறம்பானது' என்று மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ், அறிக்கை இறுதி கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் 'ஆட்சேபனைக்குரிய வகையில்' இருப்பதாகத் தொடர்ச்சியாக புகார் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளன. அவர் மீது மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்லன. அவரது, 'பீஸ் டிவி' 'வகுப்புவாதம்' மற்றும் 'ஜிஹாதிய' கருத்துகளை விதைப்பதாகவும் கூறி  வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ