Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவின் எதிர்ப்பை நிராகரித்தது இந்தியா

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை திபெத்தின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா, அருணாச்சல் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்த ஆண்டு புத்தமத தலைவர் தலாய்லாமா அருணாச்சல் வருவதாக கூறப்பட்டதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் தலாய்லாமா வரும் மார்ச் மாதம் அருணாச்சல் வருவது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விகாஸ், ”தலாய்லாமா இந்தியாவின் சிறப்பு விருந்தினர். இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்வதற்கு அவருக்கு கட்டுப்பாடு ஏதுமில்லை. தலாய்லாமாமை பின்பற்றுவோர் ஏராளமானோர் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ளனர்.  அவர்  அருணாச்சல் வருவதில் பிரச்னை இல்லை” என தெரிவித்துள்ளார். 

தலாய்லாமாவின் செய்தி தொடர்பாளர் தென்சின் தாகியா கூறுகையில், ”அருணாச்சல மக்களின்  அழைப்பை தலாய்லாமா ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் நிச்சயம் மார்ச் மாதம் அங்கு செல்வார். சீனாவின் எதிர்ப்பு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை”, என்றார்.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ