Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவரை சுட்டுக் கொன்ற ஐக்கிய ஜனதாதள தலைவர் மகனின் ஜாமீன் ரத்து : உச்ச நீதிமன்றம் அதிரடி

பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பு மாணவரைச் சுட்டுக் கொன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் ராக்கி யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் ராக்கி கைது செய்யப்பட உள்ளார். 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைவர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ். இவர் கடந்த மே மாதம், தனது காரை முந்திச் சென்றதற்காக, ஆதித்யா சச்தேவா என்ற 12-ம் வகுப்பு மாணவரை சுட்டு கொன்றார்.
 
இந்த வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் சில நாட்கள் முன்பு  ராக்கி யாதவுக்கு ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து பீகார் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் , ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ