Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் தூதரக அலுவலர் மெக்மூத் அக்தர் இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 48 மணி நேர கெடு விதித்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அலுவலர் சுர்ஜித் சிங்கை அந்த நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில், 'பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்றும், எந்த காரணமும் இல்லாமல் சுர்ஜித் சிங் வெளியேற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ