Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் பலி

இந்திய எல்லைப்பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, மூத்த ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ராஜோரி, சம்பா, அப்துல்லா, ஆர்எஸ் புரா சுசேத்கார்க் பகுதிகளில் பல மணி நேரம் இரு தரப்பிலும் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும், நவ்சேரா, சுந்தர்பனி மற்றும் பலன்வாலா மாவட்டங்களிலும் நேற்று முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close