Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புது வீடு, புது ரிக்‌ஷா, பென்ஷன் சலுகை…. ஹேப்பி ரிக்க்ஷாகாரர்!

எல்லா சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களும் வியப்போடு பார்க்கும்படி ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒரு வேலை செய்துள்ளார். சவாரி ஒன்றிற்காக முதலமைச்சரின் காரைத் தாண்டிச் சென்று முதல்வர் மாளிகையின் முகவாயிலில் நிறுத்தியுள்ளார் தனது ரிக்‌ஷாவை... இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அதன் பிறகு தான் ஆச்சர்யமே…. உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் குடியிருப்புக்கு வாசலில் தனது ரிக்‌ஷாவை நிறுத்தியுள்ளார் ரிக்‌ஷாக்காரர் மணிராம். அதிலிருந்து இறங்கியவரை கண்டு அனைவருக்குமே ஆச்சர்யம்….. இவ்வளவு பெரிய மனிதர் ரிக்‌ஷாவில் வந்துள்ளாரே என எல்லோரும் வியப்பாகியுள்ளனர்.

PAYTM தலைமை நிர்வாகிக்கு ரிக்‌ஷா:

அப்படி மணிராமின் சவாரிக்கு கிடைத்தவர் யார் தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு. விஜய் ஷேகர் அவர்கள்….. PAYTMன் தலைமை நிர்வாகி இவர்….. முதலமைச்சர் கையில் இருந்து யாஷ் பாரதி விருது வாங்கிய பின்னர் அவரைப் பார்க்க நேரில் சென்றபோது வழியில் கார் ட்ராஃபிக்கில் சிக்கிக்கொள்ள, ரிக்‌ஷா தேடியுள்ளார். அங்கு தான் மணிராமை சந்தித்துள்ளார். எவ்வித இடர்பாடும் இன்றி ரிக்‌ஷாவில் அலேக்காக விஜய் ஷேகரை கூட்டிச் சென்றுள்ளார் மணிராம்.

ஹேப்பி சலுகைகள்:

ரிக்‌ஷாவில் விஜய் ஷேகரை ஏற்றிய பிறகு மணிராமின் வாழ்வில் நடந்தவை எல்லாம் அதிசயங்கள் தான். டிலாய்வை சேர்ந்த இவரது பயோடேட்டாவை அம்மாநில முதல்வரே விசாரித்துள்ளார். மணிராம் எங்கு வசிக்கிறார், அவரது குடும்பம், குழந்தைகள், சம்பளம் என அனைத்தையும் விசாரித்த பின்னரே அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் மணிராம்….. முதல்வரின் ஆணைக்கினங்க தீபாவளிக்காக கையில் 6000 ரூபாய் பணமும், ஒரு புது ப்ராண்டட் ரிக்ஷாவும் பரிசாக அளிக்கப்பட்டு, அவர் குடும்பத்துக்கு சமாஜ்வாடி சார்பில் பென்ஷனும், தங்குவதற்கு லக்னோவில் அழகான வீடும் தரப்பட்டுள்ளது.

மணிராமின் சந்தோஷம்….:

இதுகுறித்து ரிக்ஷா ஓட்டுனர் மணிராம் கூறும்போது, “சவாரிக்கு அவர் கூப்பிடும்போது புகைபிடித்துக் கொண்டிருந்தேன்…..  யாரோ ஒரு  ஷபாரி போட்ட மனிதர் சவாரிக்கு கூப்பிடுகிறார் என்று தான் அவரை ஏற்றிச் சென்றேன். ஏதோ ஒரு பெரிய பங்களாவில் இறக்கிவிடச் சொன்னார், நானும் இறக்கிவிட்டேன். வாயிலில் இறக்கிவிட்டேன்… சவாரிக்கு ஏறியவர் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் பேசினார், அவர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். அந்த பங்களாவிற்குள் இதுவரை நான் சென்றதில்லை. உள்ளே சென்றபோது தான் அங்கே தான் அமைச்சர்களைக் கண்டேன், அதன் பிறகு எல்லாமே தன்னாலயே நடந்துவிட்டது” என்கிறார் சந்தோஷத்தோடு. இந்த தீபாவளி மணிராமிற்கு அதிர்ஷ்ட்டதோடு கூடிய சந்தோஷ தீபாவளி தான்…..

- ஜெ.நிவேதா
மாணவப் பத்திரிகையாளர்

நன்றி:Indiatimes.com

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ