Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவாவின் முதல் பெண் முதல்வர் சசிகலா ககோத்கர் காலமானார்

கோவா மாநில முதல் பெண் முதல்வர் சசிகலா ககோத்கர் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

கோவாவில் முதல்வராக இருந்த தயானந்த பண்டோத்கர் 1973ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகள் சசிகலா ககோத்கர் முதல்வராக பொறுப்பேற்றார். இவர் 1979 ஏப்ரல் மாதம் வரையில் முதல்வர் பதவியில் நீடித்தார். கோவா மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற அவர் 1990ல் கல்வியமைச்சராகவும் இருந்தார். 

கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சகிகலா ககோத்கர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மாநில முதல்வர்  லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சசிகலா ககோத்கர், ஆரம்பக் கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் பயன்படுத்துவதை தவிர்த்து மராத்தி மொழியை பிராந்திய மொழியாக கொண்டுவர காரணமாக இருந்தார். தற்போது ஆங்கில வழி பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து போராடி வரும் பாரதிய பாஷா சுரக்ஷா மஞ்ச் அமைப்பின் தலைவராக இருந்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ