Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட இவர்கள்தான் காரணம்!

தீபாவளியை நாம் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ராணுவ வீரர்கள்தான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்த இந்திய - திபெத்திய எல்லைப் படையின் 55வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் அத்துமீறலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பிஎஸ்எப் மற்றும் ராணுவம் தக்க பதிலடி தரும்.

இந்தியாவுடன் நேரடியாக மோத, பாகிஸ்தானுக்கு சிறிதும் தைரியமில்லை. அதனால், கோழைகளின் ஆயுதமான பயங்கரவாதம் மூலம், இந்தியாவுடன், மறைமுக போரில், பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின், அதிரடி நடவடிக்கைக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவம் அச்சம் அடைந்துள்ளது என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close