Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம்மரம் கடத்தியதாக மேலும் 43 தமிழர்கள் கைது

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி மேலும் 43 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மரங்கள் கடத்தி வந்த 3 வாகனங்கள் மற்றும் 24 செம்மரங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செம்மரங்களை கடத்தி வந்ததாக கூறி நேற்று 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இரண்டு நாளில் மட்டும் 126 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ