Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வாழ்த்து பரிமாற்றம் இல்லை

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இனிப்பு பரிமாற்றம் கிடையாது என எல்லைப் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், சுதந்திர தினம், ரம்ஜான், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வது வழக்கம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய உரி தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பல நாட்களாக எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே இந்த ஆண்டு வாழ்த்து பரிமாற்றம் இல்லை என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இனிப்பு பரிமாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ