Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

​வீர மரணம் அடைந்த மன்தீப் சிங்கின் இறுதிச்சடங்கு

இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் இறுதிச்சடங்கில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஹரியானா மாநிலம் அந்தாஹேதி கிராமத்தைச் சேர்ந்த மன்தீப் சிங் என்ற ராணுவ வீரர் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய, ராணுவ மரியாதையுடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.  இன்று அவரது உடலுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன்  அடக்கம் செய்யப்பட்டது.மன்தீப் சிங் வீர மரணத்தை நினைவுக் கூறும் வகையில் குருஷேத்ராவில் தீபாவளி கொண்டாடப்படவில்லை. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ