Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சிமி தீவிரவாதிகள் 8 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் உள்ள சிறையில் சிமி தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறைக்காவலர் ஒருவரைக் கொன்று விட்டு 8 தீவிரவாதிகளும் போர்வையை கயிறாக பயன்படுத்தி தப்பினர். அவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே, கோபால் புறநகர் பகுதியான இன்ந்த்கெடி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர், தீவிரவாதிகள் ஜாகீர் உசேன், மெகபூப், அப்துல் மஜித், மொகமத், முஜீப் ஷிக், மொகத் ஹலித் அகமத், ஜாகீர் உசேன் ஷாகித் உள்பட 8 பேரை  சுட்டுக் கொன்றனர். இதில் ஜாகீர் உசேன், மெகபூப் என்ற தீவிரவாதிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் ஆவர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ