Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ரக பருப்பு வகைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய ரக பருப்பு வகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிலைய வளாகத்தில் புதிய ரக பருப்பு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பார்வையிட்டார்.

அதன்பின்னர் அவர் கூறுகையில்,  மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாகப் பருப்பு வகைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

நமது உணவில் இடம்பெறும் முக்கிய புரதச்சத்துக்குக் காரணமாக பருப்பு வகைகள் இருப்பதாகவும், அவற்றின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதியை அதிகமாக செய்யும் நாடு  இந்தியாதான் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அருண் ஜெட்லி, வர்த்தக ரீதியிலான விவசாயத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், புதிய பருப்பு வகை (பூசா-16) அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த பருப்பு வகையை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூலைப் பெறமுடியும் என்றும் கூறிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் நம் நாடு, பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடையும் என்றும் அவர் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ