Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவுக்குத் தேவை இன்னும் 30 லட்சம் ஆசிரியர்கள்.!' யுனெஸ்கோ கணக்கு

இந்தியாவில் 30 லட்சம் ஆசிரியர்கள் தேவை சொல்கிறது யுனஸ்கோ

அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் 30 லட்சம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும், மேல்நிலை பள்ளிகளில் 80 லட்சம் ஆசிரியர்களும் தேவைப்படுகிறார்கள் என்று கணக்கிட்டு இருக்கிறது யுனஸ்கோவின் புள்ளியியல் நிறுவனம்.

இது தனது ஆய்வில், ஐ.நா. சபையின் நீடித்த மேம்பாட்டு வளர்ச்சி இலக்கில் கீழ் உலக அளவில் 2030-ஆம் ஆண்டுக்குள் ஆரம்பப்பள்ளிக்கு 24.4 மில்லியன் ஆசிரியர்களும், உயர்நிலை பள்ளிக்கு 44.4 மில்லியன் ஆசிரியர்கள் என மொத்தம் 68.8 மில்லியன் ஆசிரியர்கள் தேவை என்று என்று கணக்கீட்டு இருக்கிறது. இந்த கணக்கீட்டில் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் தற்போது ஆரம்ப கல்வி ஆசிரியராக உள்ளவர்களின் 21 மில்லியன் பேரும், மேல்நிலை பள்ளியில் 27.6 மில்லியன் ஆசிரியர்களும் ஓய்வு பெற தயாராகி வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்து இருக்கிறது.

உலகளவில் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் சகாரா ஆப்பிரிக்க பகுதியில் ஆசிரியர்களுக்கு பெருமளவில் தேவை இருக்கிறது. இங்கு 17 மில்லியன் ஆசிரியர்களும், இதற்கு அடுத்து தெற்காசியாவில் 15 மில்லியன் ஆசிரியர்களுக்கான தேவை இருக்கிறது.

தெற்காசிய பகுதியில் ஆரம்ப கல்வியில் 34 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மேல்நிலை பள்ளியில் 29 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதமும் இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. இங்கு ஆரம்ப கல்வியில் மட்டும் 70% ஆசிரியர்களுக்கான தேவை இருக்கிறது. உயர்கல்வி நிலையில் 90% ஆசிரியர்கள் தேவை.

தற்போது உலக அளவில் 263 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு வெளியில் இருக்கிறார்கள் என்றும், இதில் 25 மில்லியன் குழந்தைகள் இதுவரை ஒரு முறை கூட பள்ளியின் பக்கமே வராதவர்கள் என்றும் சொல்கிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விகிதம் போன்ற காரணிகள் ஆசிரியர் பணிக்கு தேவை அதிகரித்து வருகிறது.

தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் உயரும் போது, அந்த மாணவர் படித்த பள்ளி ஆசிரியரின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இதனால், ஆசிரியர்களைப் போட்டி போட்டு அதிக சம்பளம் கொடுத்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள் தனியார் பள்ளிகள். இதனால் நல்ல அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு கை நிறைய சம்பளமும், இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது. தற்போது வகுப்பறையில் அதிக கூட்டம் நிரம்பி இருக்கிறது. இதர அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலை மேம்பாடு அடையும் போது ஆசிரியர்களின் நிலையும் பெருமளவில் மேம்பாடு அடையும். ஆக, அடுத்த வருகின்ற காலங்கள் ஆசிரியர்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்.


- ஞா. சக்திவேல்முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close