Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போபால் என்கவுன்ட்டர் போலியானது- கட்ஜூ

போபாலில் எட்டு தீவிரவாதிகள் நேற்று என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதில் பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இந்த என்கவுன்ட்டர் முற்றிலும் போலியானது என்று அவரது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அவர் அந்த ட்விட்டர் பதிவில் மேலும், 'நான் பார்த்தவரை, போபாலில் நடந்த இந்த 'என்கவுன்ட்டர்' போலியானது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும். யார் இதை நேரடியாக செயல்படுத்தினார்களோ அவர்களை மட்டும் நான் கூறவில்லை. மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் என் அனைவரையும் இதில் உள்ளடக்க வேண்டும்...' என்று கூறிப்பிட்டிருந்தார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close