Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புகையிலை கட்டுப்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்

உலக சுகாதார அமைப்பின், புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இணையவிருப்பதை, இந்தியா மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. 

டெல்லியில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை  FCTC என்னும் புகையிலை கட்டுப்பாடு கட்டமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்குபெற உள்ளனர். மாநாட்டில் சர்வதேச அளவில் புகையிலைக்கு எதிரான உடன்படிக்கை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், இந்தியா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதாகவும், அதில் கூறப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கு இந்தியா கட்டுப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் புகையிலை  பயன்பாட்டினால் ஒரு ஆண்டுக்கு ஆறு மில்லியன் மக்கள் பலியாவது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ