Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

TimesNow-க்கு பைபை சொல்லும் அர்னாப் கோஸ்வாமி

இந்தியாவின் பிரபல ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமி TimesNow செய்தி சேனலை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்த அறிவிப்பை டைம்ஸ் எடிட்டோரியல் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார். 

டைம்ஸ் சேனலின் தலைமை எடிட்டராகவும், பிரபல செய்தி நெறியாளராகவும் அனைவராலும் அறியப்பட்ட அர்னாப் கோஸ்வாமி, ஊடகத்துறையை விட்டு விலகி, தொழிலதிபராக உருவெடுக்க உள்ளார். இது டைம்ஸ் நிறுவனத்துக்கு பெரிய இழப்பாக இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றி விமர்சித்த அர்னாப் கோஸ்வாமிக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அர்னாப்புக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

அர்னாப் ராஜினாமா செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், டைம்ஸ் சேனல், ”Arnab is back"  என்றும் இன்றிரவு விவாத நிகழ்ச்சியில் பங்குபெறுவார் என்றும்  ஃபிளாஷ் செய்து வருகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ