Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்னாப் டைம்ஸ் நவ்விலிருந்து விலகினார்! இதுதான் காரணமா...?

ர்னாப் கோஸ்வாமி... வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகளின் உரத்த குரலுக்குச் சொந்தக்காரர். 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த அர்னாப், தற்போது அந்த தொலைக்காட்சியிலிருந்து விலகியுள்ளார் என்கிற வகையில் செய்திகள் வெளியானது

'டைம்ஸ் நவ்'  அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இதர செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பில் அவர் இந்த முடிவை அறிவித்ததாகக் கூறப்பட்டது. எனினும் மீடியாவிலிருந்து முழுவதுமாக  விலகியிருக்கும் திட்டம் எதுவும் அர்னாப்புக்கு இல்லாத நிலையில், புதிதாக ஒரு ஊடக நிறுவனத்தை அவர் தொடங்கலாம் என்றனர் அந்த தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர்கள். இந்நிலையில் அர்னாப் பதவி விலகவில்லை என்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிலேயே நீடிப்பார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அசாம் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவரின் மகனாகப் பிறந்த அர்னாப், டெல்லி இந்துக் கல்லூரியில் சமூகவியலும், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் படிப்பும் முடித்தவர். டெலிகிராப் பத்திரிக்கையில் முதன்முதலாகப் பணிபுரியத் தொடங்கி, பின்னர் 1995-ல், NDTV-ல் இணைந்தார். பின்னர் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியில் இணைந்தார்.

2006-ல் தொடங்கப்பட்ட 'டைம்ஸ் நவ்' நிறுவனத்தின் ரேட்டிங்கை ஒரே வருடத்தில் முதலிடத்துக்கு கொண்டு வந்தவர் அர்னாப். அவரின் ’The News Hour', 'Frankly speaking with Arnab' உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 70% பார்வையாளர்களை எட்டு வருடங்கள் தொடர்ச்சியாக, தன் வசம் வைத்திருந்தது. மேலும் கார்கில் போர் தொடர்பான சர்ச்சை, 2ஜி வழக்கு, காமன்வெல்த் சர்ச்சை மற்றும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை உடனடியாகவும், கவனத்தை நிலைப்படுத்தும் வகையிலும் கொண்டு சென்ற அர்னாப்-ன் நிகழ்ச்சி மேலாண்மை முறை பரவலாகப் பேசப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன், நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியுடனான அவரது பேட்டிகள், இந்தியாவின் அடுத்த பிரதமரை மக்கள் தீர்மானிக்கும் வகையில் அமைந்தது. அண்மையில் பாகிஸ்தான் தொடர்பாகக் கருத்து தெரிவித்ததற்காக இந்திய அரசு அவருக்கு Y பிரிவு பாதுகாப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அர்னாப் பதவி விலகுவாத அறிவித்ததும் மீண்டும் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டதற்குமான காரணம் என்ன? India wants to Know!  

- ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close