Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"பி.ஜே.பி-யின் இறக்குமதி குஷ்பு''- தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர்

ந்தியாவில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய சட்டக் கமிஷன் கருத்துகேட்டுவரும் நிலையில், 'பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது' என எதிர்ப்புக் குரல்களும் நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தலாக் முறை எதிர்க்கப்படவேண்டியது என்றும் பொது சிவில் சட்டம் தேவை என்கிற ரீதியிலும் பேட்டியளித்தார். குஷ்புவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் வட்டாரத்தில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ''ஷரியத் சட்டத்தில் கூறப்பட்ட தலாக்கை ரகசியமாகச் சொல்வதுதான் தவறு. அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஷரியத் சட்டத்தையே தவறு என்பது சரியல்ல. இஸ்லாமில், ஆணுக்குச் சமமாக பெண்ணுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு தனக்குப் பிடிக்காத கணவனை மனைவியானவள் விவாகரத்து செய்ய விரும்பினால், இஸ்லாமிய சட்டப்படி 'குலாஉ' வாங்கிக்கொள்ளும் வழிமுறை உள்ளது.

ஷாபானு வழக்கு தொடங்கி தற்போது புனேவைச் சேர்ந்த அர்ஷியா பக்வான் என்னும் இஸ்லாமியப் பெண்ணின் விவாகரத்து வழக்கு வரை ஷரியத் சட்டமானது ஒழுங்காகக் கையாளப்படாததே பிரச்னை. ஆனாலும்கூட பெண்ணின் விருப்பம் என்ன? என்று கேட்காமல் எங்கும் விவாகரத்து அளிக்கப்படுவதில்லை. இந்துக்களுக்கான சட்ட முறைப்படி விவாகரத்து பெறுவது தற்போது எவ்வளவு கடினமாகி வருகிறது என்பது நாடறிந்த தகவல். இப்படியான சூழலில், இஸ்லாமியச் சட்டப்படியான விவாகரத்து முறை என்பது மிகத் தெளிவாக உள்ளது.

சொத்துரிமை உட்பட ஷரியத் சட்டத்தில் சிலபல மாற்றங்களைக் செய்து அதையே பொதுசிவில் சட்டமாகவும் கொண்டுவந்தால் ஏற்கலாம். மற்றபடி பி.ஜே.பி பொதுசிவில் சட்டத்தை இப்போது கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி எண்ணிக்கையை கருத்தில் கொண்டுதான்” என்றார்.

"குஷ்பு காங்கிரஸ்காரர்தானா?"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் முகம்மது யூசுப் கூறுகையில், "குஷ்பு சொன்னது போல ஒரே நேரத்தில் தலாக் கொடுத்துப் பிரிவது இஸ்லாமில் கிடையாது. பெண்களுக்குப் பாதுகாப்பும் விவாகரத்தில் கூட சம உரிமையும் இஸ்லாமிய சட்டத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான மேம்படுத்துதல் மற்றும் விவாதத்தை கூட ஷரியத் சட்டம் அறிந்த அறிஞர்கள்தான் முன்னெடுக்க வேண்டுமே தவிர குஷ்பு இதுகுறித்து கருத்து சொன்னது கண்டிக்கத்தக்கது. தனியார் சட்டம் பொதுசிவில் சட்டமாக்கப்படவேண்டுமா என்பது குறித்துதான் தற்போது தொடர் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும் பொது சிவில் சட்டத்தைப் பற்றி அதனால் பாதிக்கப்படுபவர்கள்தான் விவாதிக்க வேண்டும். குஷ்புவுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. திருமண உறவுகள் பற்றியே தவறாகப் பேசியவர்தான் அவர். மேலும் அவர் காங்கிரசைச் சேர்ந்தவர்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த பி.ஜே.பி-யின் இறக்குமதிதான் அவர்" என்றார் காட்டமாக.

குஷ்புவின் கருத்து தொடர்பான அவரது தெளிவான விளக்கத்துக்காகத் தொடர்பு கொண்டு பேசினோம், “நோ கமெண்ட்ஸ்!” என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close