Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எங்கே எங்கள் பள்ளிகள்...?' கண்ணீர்விடும் காஷ்மீர் குழந்தைகள்!

நீங்கள் ஒரு ஊரை அடியோடு அழிக்கவேண்டுமெனில் முதலில் அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தையும், நூலகத்தையும் அழித்து விடுங்கள். ஒரு ஊரில் பள்ளிக்கூடம் அழிக்கப்படுகிறது என்றால், அந்த ஊரின் கலாசாரம் மற்றும் வாழ்வாதராம் அழிக்கப்படுகிறது என்று பொருள். பள்ளிக்கூடம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை என்றால் பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாழும் மனிதர்களும் பள்ளிக்கூடத்தின் ஓர் அங்கம்தான். கடந்த மூன்று மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் நடந்துவரும் கலவரங்கள் காரணமாக இதுவரை 26 பள்ளிக்கூடங்கள் தீக்கிரையாகி உள்ளன.

காஷ்மீர் கலவரம்

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியான புர்ஹான் வானி கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்டார். அதிலிருந்தே அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இன்று வரை பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கலவரக்காரர்கள் சிலர் பள்ளிக்கூடங்களை எரித்து நாசவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி இரவில் மூன்று பள்ளிக்கூடங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

ஹைகோர்ட் தலையீடு

காஷ்மீரில் பள்ளிகளை எரிக்கும் சம்பவங்கள் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தானகவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. பள்ளிக்கூடங்களை எரித்துவரும் கலவரக்காரர்களை விரைந்து கண்டுபிடித்து, தடுக்கவும், அவர்களுக்குத் தண்டனை கொடுக்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்வி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாநில போலீஸ் மற்றும் கல்வி வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கல்விக்கு எதிரான எதிரிகளின் முகத்திரையை கிழிக்கவேண்டும், அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்குப் பின்னரும் பள்ளிக்கூடங்களை குறி வைத்து தாக்குவது தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ராணுவ வீரர்களின் இன்னொரு முகம்

நடைபெற்று வரும் கலவரத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் ராணுவவீரர்கள், ஒய்வு நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

- ஜெ.அன்பரசன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ