Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி ராணுவ வீரர் தற்கொலை

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை (One Rank One Pension) வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் இன்று காலை டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை தங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்குப்பெற்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த  கடிதத்தில், ஓய்வுபெற்ற  ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும் இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவத்தை பற்றி ட்வீட் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் , பிரதமர் மோடி மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்