Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 40 நகரங்களில் நிலநடுக்க அபாயம்!

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து ஆர்.எம்.எஸ். பேரிடர் மேலாண்மை வாரியத்தின் முதன்மை ஆராய்ச்சி அலுவலர், ராபர்ட் முல் உட் கூறுகையில், "உலகிலேயே இந்தியாவில்தான் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இந்தியாவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும். அண்மையில் உலகையே உலுக்கிய நேபால் நிலநடுக்கம் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு அதிக வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்